
(புத்தளம் செய்தியாளர்)
புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம். நபீல் முந்தல் பிரதேச செயலகத்திற்கும், முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் புத்தளம் பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் பெற்றுள்ளனர். இவர்கள் தமது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.நபீல் 16 வருடங்கள் புத்தளம் பிரதேச செயலாளராகவும் முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் 12 வருடங்கள் முந்தல் பிரதேச செயலாளராகவும் கடமை புரிந்துள்ளனர்.
0 comments:
Post a Comment