
(புத்தளம் செய்தியாளர்)
வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்பு நிர்மாணம், மற்றும் கடற் தொழில் அமைச்சின் 2010ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி பணிகள், 2011 ஆம் ஆண்டுக்காக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடொன்று இன்று சிலாபம் இரணவில காரோலிகா ஹோட்டலில் இடம் பெற்றது.
வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்பு நிர்மாணம், மற்றும் கடற் தொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தலைமையில் அமைச்சின் செயளாலர் குமாரி வீரசேகர உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கடற்தொழில் அமைச்சுக்கள் தொடர்பாக 2010ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள், 2011ஆம் ஆண்டுக்காக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பாக தனித்தனியாக புள்ளிவிபரங்களுடன் விளக்கமளிக்கபட்டது.
0 comments:
Post a Comment