Sunday, January 01, 2012

அக்கரைப்பற்று மாநகர சபையின் வரவு - செலவுத்திட்டம் அங்கீகரிப்பு


(றிஸான் முகம்மட்) 
அக்கரைப்பற்று மாநகர சபையின் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி சபையில் சமர்ப்பித்தார். முதல்வர் அஹமட் ஸகியின் வரவு செலவுத்திட்ட உரையைத் தொடர்ந்து ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தை வரவேற்றும் பாராட்டியும் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து வரவு-செலவுத்திட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆளும்கட்சி உறுப்பினர் ஏ.எல்.தவம் சபைக்குச் சமூகமளிக்கவில்லை. எதிர்க்கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹனிபா எதிர்த்து உரையாற்றியதுடன் வெளிநடப்பும் செய்தார்.



0 comments:

Post a Comment