Wednesday, January 04, 2012

சகல பொலிஸ் நிலையங்களும் இணையத்தளத்தினூடாக தொடர்புபடுத்தப்படும்


நாட்டிலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் இணையத்தளத்தினூடாக தொடர்புபடுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் மக்களின் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்வதற்காக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதனூடாக குற்றவாளிகளுக்கு எதிராக மிகவும் குறுகிய காலத்திற்குள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், புகைப்படங்கள் போன்ற சாட்சிகளை தாமதமின்றி பரிமாரிக்கொள்ள முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

0 comments:

Post a Comment