
சர்வதேச தன்னியலாளர்கள் (தொண்டர்கள்) ஆண்டினை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் தன்னியலாளர் பிரிவின் தேசிய முன்னொடுப்புச் செயற்குழு நியூஸ் பெஃஸ்ட்டுடன் இணைந்து சமூகத்திற்காக அளப்பரிய பங்களிப்புக்களை வழங்கியவர்களையும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் உன்னதமான சேவைகளை வழங்கி முன்மாதிரியாக திகழக் கூடியவர்களையும் அடையாளம் கண்டு கௌரவிக்கும் வகையில் 'வி' விருதை கடந்த 05.12.2011 இல் MTV திரை மாளிகையில் நடாத்தி இருந்தது.
அகில இலங்கையிலிருந்து முதற்தெரிவில் 26 பேர் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் 02ஆம் தெரிவில் 15 பேர் தெரிவு செய்யட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தெரிவில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த 03 பேரும் பெரும்பான்மை இனத்தவர்கள் 23 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேற்படி இரு தெரிவுகளிலும் அகில இலங்கை ரீதியில் ஒரே ஒரு முஸ்லிம் தொண்டர் கௌரவிக்கப்பட்டார். இவர் கிழக்கு மாகாணம், அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஜனாப் எம்.ஐ. உதுமாலெவ்வை (ஜே.பி) அவரின் கௌரவிப்பை சமூக சேவை இயக்கங்கள் பாராட்டியுமுள்ளன.
0 comments:
Post a Comment