Thursday, January 05, 2012

மாத்தறையில் உல்லாசப் பயணிமீது பலாத்காரம்


மாத்தறை பொல்ஹேன பிரதேசத்திலுள்ள உல்லாசப் பயண ஹோட்டல் ஒன்றில் ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் உல்லாசப் பயணி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் குறிப்பிட்ட பெண் மாத்தறை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறிப்பிட்ட ஹோட்டலின் உரிமையாளரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தாக்குதலுக்கு இவர் தொடர்ந்தும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

0 comments:

Post a Comment