
இலங்கைக்கு கார்களை இறக்குமதி செய்பவர்கள் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தே தமது வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான அனுமதியை இலங்கையின் துறைமுக அதிகாரசபை வழங்கவுள்ளது. எனினும் இந்த திட்டத்தை பல வாகன இறக்குமதி நிறுவனங்கள் எதிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் அதிக வேலைப்பளு காரணமாக, கார் இறக்குமதிகள் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என்று இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த நடைமுறை குறித்து தமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment