Wednesday, January 04, 2012

கொரிய ஓபன் பட்மின்டன்; செய்னா வெற்றி


கொரிய ஓபன் பட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீராங்கனை செய்னா நேவல் வெற்றி பெற்றார். தென் கொரியாவில் உள்ள சியோலில், கொரிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் செய்னா நேவல், ஸ்காட்லாந்தின் சுசானை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய செய்னா 21-5, 21-6 என்ற நேர் செட்டில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி, மலேசியாவின் விவியன் காஹ் முன் ஹோ, ஹே வெய் வோன் ஜோடியை சந்தித்தது. இதில் அசத்தலாக ஆடிய ஜுவாலா-அஷ்வினி ஜோடி 21-19, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில், இந்தியாவின் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி 21-18, 21-18 என்ற நேர் செட்டில் மலேசியாவின் பெங் சூன் சான், லியு யிங் கோஹ் ஜோடியை வீழ்த்தியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் அஜய் ஜெயராம், தென் கொரியாவின் வான் ஹோ ஷான் மோதினர். இதன் முதல் செட்டில் தென் கொரிய வீரர் 1-0 என முன்னிலை வகித்திருந்த போது, காயம் காரணமாக அஜய் ஜெயராம் விலகுவதாக தெரிவித்தார். இதனால் வான் ஹோ ÷ஷான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

0 comments:

Post a Comment